Saturday 14 July 2018

சொந்த சின்னத்தில் போட்டியா?; தேமுவின் நிலைப்பாட்டை அம்னோ விவரிக்க வேண்டும்- மணிமாறன்

ஈப்போ-

சிலாங்கூர், சுங்கை கண்டீஸ் இடைத் தேர்தலில் அம்னோ தனது சொந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிடும் என கூறப்படுவது தேசிய முன்னணியின் நிலைப்பாட்டை கேள்விக்குறியாக்கியுள்ளது என சுங்கை சிப்புட் தொகுதி  மஇகா செயலாளர் கி.மணிமாறன் கூறினார்.

தேசிய முன்னணி கூட்டணியில் தற்போது அம்னோ, மசீச, மஇகா ஆகிய மூன்று பங்காளித்துவ கட்சிகள் உள்ள நிலையில் அம்னோ தனது சொந்த சின்னத்தில் போட்டியிடும் என அதன் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் ஹசான் கூறியுள்ளார்.

இந்த கூற்று தேமுவில் பங்காளி கட்சிகளாக மசீச, மஇகாவை நிலைக்குலையச் செய்வதோடு தேமுவின் அடுத்தக்கட்ட நிலை என்னவென்பது கேள்விக்குறியாக உள்ளது.

இத்தொகுதியின் இடைத் தேர்தலில் அம்னோ சொந்த  சின்னத்தின் கீழ் போட்டியிட முடிவெடுத்துள்ளது அவர்களின் உரிமையாகும். ஆனால் அதற்கு முன்னர் தேமுவின் நிலைப்பாடு என்னவென்பது உறுதி கூறப்பட வேண்டும்.

அதுதான் ம இகாவை அடுத்தக்கட்ட நகர்வை முடிவு செய்யவுள்ளது என்ற நிலையில் அம்னோவின் தலைவரான டத்தோஶ்ரீ சாயிட் ஹமிடி விவரிக்க வேண்டும் என மணிமாறன் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment