Wednesday, 4 July 2018

பேரா புதிய சபாநாயகராக ஙே கூ ஹாம் தேர்வு


ரா.தங்கமணி

ஈப்போ-
பேரா மாநில சட்டமன்ற சபாநாயகராக புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஙே கூ ஹாம் இன்று தேர்வு செய்யப்பட்டார்.

இன்று காலை நடைபெற்ற சட்டமன்ற சபாநாயகர் தேர்வின்போது 31 வாக்குகளை பெற்ற ஙே கூ ஹாம் புதிய சட்டமன்ற சபாநாயகராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

துணை சபாநாயகராக பெராங் சட்டமன்ற உறுப்பினர் அமினுடின் சூல்கிப்ளி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கு முன் சட்டமன்ற சபாநாயகராக தேசிய முன்னணி சார்பில் (மஇகா) டத்தோ எஸ்.தங்கேஸ்வரி பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment