Sunday, 29 July 2018

சொஸ்மா அகற்றமா?: ஐஎஸ்ஏ ரத்து செய்தபோது நடந்தவற்றை எண்ணி பாருங்கள்- முன்னாள் ஐஜிபி


 கோலாலம்பூர்
சொஸ்மா உட்பட  பல்வேறு சட்டங்களை அகற்றும் முன்னர் உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் (ஐஎஸ்ஏ) அகற்றப்பட்டபோது நடந்தவற்றை சீர்தூக்கி பார்க்க வேண்டும் முன்னாள் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான் கருத்து தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு குற்றச் சட்டம் (சொஸ்மா),  1959 குற்றத் தடுப்பு சட்டம் (பொக்கா), பயங்கரவாத தடுப்பு சட்டம் 2015 (பொடா) ஆகிய சட்டங்களை அகற்றுவதற்கு முன் பின்விளைவுகள் ஆராயப்பட வேண்டும்.

ஐஎஸ்ஏ. அவசர கால சட்டம் ஆகியவற்றை ரத்து செய்தபோது நாட்டில் கடுமையாக குற்றங்கள் தலைவிரித்தாடின. ஒரு பகுதி தங்கள் வசப்படுத்திக் கொள்வதற்கான ரகசிய கும்பல்கள் மோதி கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்தன.

சொஸ்மா, பொடா, பொக்கா போன்ற சட்டங்கள் அகற்றப்பட்டால் ஐஎஸ் உட்பட ஆயுதமேந்திய கும்பல்களின் பயங்கரவாதச் செயல்களை ஒடுக்க முடியாமல் போகும் அபாயம் உள்ளதை ஆராய வேண்டும் என்றார் அவர்.

பயங்கரவாத சக்திகளிடமிருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாக்க கடுமையான சட்டங்கள் அவசியமானது என கருதுவதாக அவர் மேலும் சொன்னார்.

மக்களை அடக்கி, ஒடுக்கும் சோஸ்மா போன்ற சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என கடந்த 22ஆம் தேதி பிரதமர் துன் மகாதீர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment