Friday, 13 July 2018

ஜசெகவின் நாடாளுமன்ற குழுத் தலைவரானார் அந்தோணி லோக்


கோலாலம்பூர்-

அடுத்த வாரம் தொடங்கப்படவுள்ள மக்களவை முதல் கூட்டத்தில் ஜசெகவின் நாடாளுமன்றத் தலைவராக  போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் நியமிக்கப்பட்டார்.

ஜூலை 16இல் தொடங்கப்படும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஜசெகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அந்தோணி லோக் தான் தலைமையேற்க வேண்டும் என கட்சி செயற்குழு முடிவு செய்தது என ஜசெகவின் மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் கூறினார்.

இதற்கு முன்னர் அப்பதவியை லிம் கிட் சியாங் வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment