Sunday 8 July 2018

தொழிலாளர் நலனை காக்க தொழில் சங்கங்களை அமைப்பீர்- மனிதவள அமைச்சுக்கு பிஎஸ்எம் கோரிக்கை


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
நாட்டிலுள்ள தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்பட அனைத்து நிறுவனங்களிலும்  தொழிலாளர் சங்கம் அமைக்கப்படுவதற்கு ஏதுவாக மனிதவள அமைச்சு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என சுங்கை சிப்புட் பிஎஸ்எம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இன்று பல நிறுவனங்களில் தொழிலாலர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுவன நிர்வாகம் மேற்கொள்ளும்போது அங்கு தொழிலாளர்களுக்கான பிரதிநிதி இல்லாத காரணத்தில் விவரம் அறியாத தொழிலாளர்கள் முதலாளிகளின் சதிராட்டத்தில் பலியாக்கப்படுகின்றனர்.

தொழிலாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க  தங்களது பிரதிநிதி இல்லாத சூழலே இன்று பல நிறுவனங்களில் நிலவுகிறது. இதனை களைய அனைத்து தொழில் நிறுவனங்களிலும் 'தொழிற்சங்கம்' அமைக்க மனிதவள அமைச்சு சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனசுங்கை சிப்புட் பிஎஸ்எம் கட்சியின் செயலவை உறுப்பினர் சுகுமாறன் வலியுறுத்தினார்.

தொழில் சங்கங்கள் இல்லாத காரணத்தினால் இன்று பல நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளும் வாய்ப்புகள் மறுக்கப்படுகிம்ன்றன.

கடந்த தேசிய முன்னணி அரசாங்கம் முதலாளித்துவத்திற்கு ஆதரவாக செயல்பட்ட காரணத்தினால் பல நிறுவனங்களில் தொழில் சங்கம் அமைக்க முடியாத சூழல் நிலவியது.

ஆனால் தற்போதைய நம்பிக்கை கூட்டணி அரசாங்கம்  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம். மக்களுக்கு முன்னுரிமை வழங்கும் அரசாங்கமாக கருதப்படும் நம்பிக்கைக் கூட்டணி மலேசிய தொழில் சங்க காங்கிரஸுடன் அணுக்கமான உறவை கொண்டுள்ளது.

இத்தகைய சூழலில் பல்வேறு துறைகளைச் சார்ந்த நிறுவனங்களில் தொழில் சங்கம் அமைய வழிவகுக்க வேண்டும் என இன்று 'பெல்டன்' நிறுவன தொழிலாளர்களுடன் நடந்த சந்திப்பின்போது செய்தியாளர்களிடம் பேசுகையில் சுகுமாறன் இவ்வாறு கூறினார்.

இச்சந்திப்பின்போது பிஎஸ்எம் கட்சியின் தலைவர் அகஸ்டின், நாகேந்திரன், கார்த்திக்,  தொழிலாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment