Wednesday, 18 July 2018

கல்வியே இந்தியர்களின் மேம்பாட்டிற்கான அடிதளம் - எஸ்.கேசவன்

சுங்கைசிப்புட் –அன்மையில் கோலகங்சார் மாவட்டத்திலுள்ள 12 தமிழ்ப்பள்ளிகளிலிருந்தும் சுமார் 75 மீள்தி மாணவர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு மூன்று நாள் யு.பி.எஸ்.ஆர்தேர்வு வழிகாட்டி பயிற்சி பட்டறை இங்குள்ள கால்நடை வளர்ப்புப் பயிற்சி இலாகாவின்    தங்கும் விடுதியில் மிகச்சிறப்பாக வழிநடத்தப்பட்டது.

சுங்கை சிப்புட் இந்திய இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பயிற்சி பட்டறையினைச் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன்  அதிகாரப்பூர்வமாகத்  திறந்து  வைத்தார். இந்திய சமுதாயம் இந்நாட்டில் மேம்பாடு காண கல்வியே அடிதளம் என அவர்  குறிப்பிட்டார். அனைத்து  யு.பி.எஸ்.ஆர். முகாம் போன்று மிகச் சிறந்த  மாணவர்களை மட்டுமே தெரிவு செய்து இம்முகாமை வழிநடத்தாது, மீள்திற மாணவர்களைத்  தேர்ந்தெடுத்து அவர்களையும் முழுத் தேர்ச்சி பெறுவதற்கு வழி வகுக்கும்  ஒரு  பயிற்சி  பட்டறையாக இது அமைந்துள்ளது. மேலும், தமிழ்ப்பள்ளிகளின் தேர்ச்சி  விகிதத்தை  அதிகரிப்பது மட்டுமல்லாது அதிகமான இந்திய மாணவர்கள் புகுமுக வகுப்பிற்குச்  செல்வதைத் தவிர்த்திடவும் இம்முகாம் வழிவகுக்கும் என்றார்.

கல்வித் துறையில் இந்தியர்கள் சிறந்து விளங்க செய்ய வேண்டும் என்பதே தனது  நோக்கம் என குறிப்பிட்ட கேசவன் அதற்காக  சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் தான் முழு  மூச்சாக  பாடுபடப்  போவதாகக்  குறிப்பிட்டார்.  தொடர்ந்து,  சுமார்  13  ஆண்டுகளாக பல்வேறு பயன்மிக்க  நிகழ்வுகளை  இந்திய  சமுதாயம்  மட்டுமல்லாமல்  பிற  சமுதாய  நலனுக்காகவும்  செய்து  வரும்  சுங்கை  சிப்புட்  இந்திய  இயக்கத்தை  வெகுவாகப் பாராட்டிய கேசவன்,  இனிவரும்  காலங்களில்  அவ்வியக்கத்தின்  அனைத்து நிகழ்வுகளுக்கும் தன் முழு ஆதரவையும் வழங்குவதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து,யூ.பி.எஸ்.ஆர்பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு மிகச்  சிறந்த தன்முனைப்பு சொற்பொழிவினை வழங்கினார். அதன் பின்னர்,சுங்கை சிப்புட் இந்தியஇயக்கத்தின் தலைவர் வீசின்னராஜுவிற்கும், அவர்தம் உறுப்பினர்களுக்கும் தமது  நன்றியினைத் தெரிவித்து கொண்டார்.

No comments:

Post a Comment