Saturday, 7 July 2018

குடியுரிமை பெறுவதற்காக திருமதி ஆவடம்மாவுக்கு உதவிக்கரம் நீட்டினார் சிவசுப்பிரமணியம்


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
நீல நிற அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து காத்திருந்த திருமதி ஆவடம்மா த/பெ நாராயணசாமிக்கு விண்ணப்ப பரிசீலனைக்கு தேவையான 300 வெள்ளியை கொடுத்து உதவினார் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம்.

மலேசிய குடியுரிமைக்காக திருமதி ஆவடம்மா செய்திருந்த விண்ணப்பத்தை ஏற்று அதனை அங்கீகரித்த தேசிய பதிவிலாகா குடியுரிமையை பெறும் கட்டணத் தொகையான 300 வெள்ளியை செலுத்த வேண்டும் என கோரியிருந்தது.

இவ்விவகாரம் தொடர்பில் ஆதி.சிவசுப்பிரமணியத்தை சந்தித்து உதவி கோரினார் திருமதி ஆவடம்மா. நெஞ்சுவலி காரணமாக திருமதி ஆவடம்மாவும் அவரது கணவர் எட்வர்ட் ராஜும் வேலைக்கு செல்ல முடியாத சூழலை எதிர்கொண்டுள்ளனர்.

அவரின் குடும்ப சூழலை ஆராய்ந்த சிவசுப்பிரமணியம் கட்டண தொகையான 300 வெள்ளி வழங்கி உதவினார்.

No comments:

Post a Comment