புனிதா சுகுமாறன்
ஈப்போ-
இந்திய மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் எனும் நோக்கில் கிந்தா இந்தியர் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்வி கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த தன்முனைப்புப் பேச்சாளர் டாக்டர் காதர் இப்ராஹிம் தலைமையில் நடைபெறும் இந்த கருத்தரங்கு வரும் 29.7.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.30 மணிவரை ஈப்போ, ஜாலான் குட்வாராவிலுள்ள கிந்தா இந்தியர் சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இக்கருத்தரங்கை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார். புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் நிறைவு செய்து வைப்பார்.
இலவசமாக நடைபெறும் இந்நிகழ்வில் 5ஆம் ஆண்டு மாணவர்கள் முதல் படிவம் 6 வரை பயிலும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என ஏற்பாட்டுக் குழுத் தலைவர் செளந்திர பாண்டியன் குறிப்பிட்டார்.
தொடர்புக்கு: 017-3231151, 012-4326771
No comments:
Post a Comment