ஷா ஆலம்-
அடுத்தாண்டு தொடங்கப்படும் பள்ளி தவணையின்போது அனைத்து மாணவர்களும் கறுப்பு நிற காலணியை அணிய வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பெற்றோர்களின் குறையை தீர்க்கும் வகையில் மாணவர்களுக்கு கறுப்பு நிற காலணி அணிய கல்வி அமைச்சு முடிவெடுத்துள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள வெள்ளை நிற காலணிக்கு பதிலாக கறுப்பு நிற காலணி அறிமுகப்படுத்தபடவுள்ளது.
இது நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களுக்கு பொதுவாகும் என குறிப்பிட கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலிக், ஆரம்பப்பள்ளி, இடைநிலைப்பள்ளி மாணவர்கள் அனைவரும் கறுப்பு நிற காலணியை அணிய வேண்டும் என்றார்.
மாணவர்கள் மேற்கொள்ளும் புறப்பாட நடவடிக்கையின்போது வெள்ளை நிற காலணி அசுத்தமவடைவதாக பல பெற்றோர்கள் குறைபட்டு கொள்கின்றனர்.
இந்த குறையை போக்கும் வகையில் கறுப்பு நிற காலணி பெற்றோருக்கு நிம்மதியாக அமையும் என அவர் மேலும் சொன்னார்.
No comments:
Post a Comment