Tuesday, 10 July 2018
வெ.5 லட்சம் ஜாமீன் தொகையை செலுத்தினார் நஜிப்
கோலாலம்பூர்-
கோலாம்பூர் உயர் நீதிமன்றத்தில் தனக்கு விதிக்கப்பட்ட எஞ்சிய ஜாமீன் தொகையை செலுத்தினார் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்.
1எம்டிபி விவகாரம் தொடர்பில் எம்ஏசிசி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கடந்த புதன்கிழமை நீதிமன்றத்தில் 4 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட டத்தோஶ்ரீ நஜிப், அக்குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினார்.
பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவருக்கு ஜாமீன் தொகையாக 10 லட்சம் வெள்ளி விதிக்கப்பட்டது, அதில் 5 லட்சம் வெள்ளியை ஜாமீன் வழங்கப்பட்டபோதே செலுத்தப்பட்ட நிலையில் எஞ்சிய தொகையை திங்கட்கிழமை (இன்று) செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
அதன் பேரின் இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு வந்த டத்தோஶ்ரீ நஜிப் 5 லட்சம் வெள்ளி ஜாமீன் தொகையை செலுத்தினார்.
நீதிமன்றத்திற்கு வந்த நஜிப்புடன் அவரின் துணைவியார் டத்தின்ஶ்ரீ ரோஸ்மா மன்சோரும் வந்திருந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment