புனிதா சுகுமாறன்
ஈப்போ-
பேரா மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் 59 பேர் இன்று பதவி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
புதிய சட்டமன்ற சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஙே கூ ஹாம் முன்னிலையில் பேரா மந்திரி பெசார் அஹ்மாட் ஃபைசால் அஸுமு உட்பட 10 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவி உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.
நம்பிக்கை கூட்டணியைச் சேர்ந்த 30 சட்டமன்ற உறுப்பினர்களும் தேசிய முன்னணியைச் சேர்ந்த 25 சட்டமன்ற உறுப்பினர்களும் பாஸ் கட்சியைச் சேர்ந்த 3 சட்டமன்ற உறுப்பினர்களும் ஒரு சுயேட்சை உறுப்பினர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன், புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம், உலு கிந்தா சட்டமன்ற உறுப்பினர் அராஃபாட் ஆகியோரும் இதில் அடங்குவர்.
No comments:
Post a Comment