Saturday, 7 July 2018

5 நாடுகளில் “வெடிகுண்டு பசங்க” திரைப்படம் வெளியீடு

சென்னை-
வீடு புரோடக்‌ஷன், ஆஸ்ட்ரோ வானவில் இணைந்து வழங்கும் “வெடிகுண்டு பசங்க” திரைப்படம் வரும் ஜூலை 26ஆம் தேதி மலேசியாவில் மட்டுமின்றி இந்தியா, சிங்கப்பூர், ஸ்ரீ லங்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள திரையரங்குகளில் வெளியீடு காணவுள்ளது.

மலேசிய கலைஞர்களில் நடிப்பில் உருவாகியுள்ள  இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று  (ஜூலை 5) சென்னையில் நடைபெற்றது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் ஆஸ்ட்ரோ தமிழ் பிரிவின் துணை இயக்குனர் டாக்டர் ராஜாமணி செல்லமுத்து, ஆஸ்ட்ரோ தமிழ் நிகழ்ச்சியின் துணைத் தலைவர் முருகையா வெள்ளை, நடிகர் கே.பாக்யராஜ், இயக்குனர் பா.ரஞ்சித், நடிகர் சதிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டேனிஸ் குமார்,  சங்கீதா கிருஷ்ணசாமி, ‘குற்ற பத்திரிகை’ சீலன், பிரகாஸ், “விழுதுகள்” ரேவதி, ஆட்டம் 100 வகை அறிவிப்பாளார் “விகடகவி” மகேன், ‘ஒலா போலா’ சரண், குபேன், ‘வல்லவர் சீசன் 3’ வெற்றியாளர் பாஷிணி சிவகுமார் உட்பட பலர் இத்திரைப்பட்டத்தில் நடித்துள்ளார்கள்.
டாக்டர் விமலா பெருமாள் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் பி.சிதம்பரம் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

No comments:

Post a Comment