ஷா ஆலம்-
வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெறவுள்ள சுங்கை கண்டீஸ் இடைத் தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
பக்காத்தான் ஹராப்பான் சார்பில் முகமட் ஸவாவி (பிகேஆர்), தேசிய முன்னணி சார்பில் லொக்மான் நோர் அடாம் ஆகியோர் போட்டியிடும் சூழலில் சுயேட்சை வேட்பாளராக கே.மூர்த்தி களமிறங்கியுள்ளார்.
இன்றுக் காலை டேவான் பெசார் தஞ்சோங்கில் நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலின்போது மும்முனைப் போட்டி நிலவுவதாக தேர்தல் அதிகாரி அஹ்மாட் ஸஹாரின் முகமட் சாட் அறிவித்தார்.
சுங்கை கண்டீஸ் சட்டமன்ற உறுப்பினர் மாட் சுஹாய்மி ஷாபி கடந்த ஜூலை 2ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
No comments:
Post a Comment