Thursday, 5 July 2018

குற்றச்சாட்டுகளை மறுத்தார் டத்தோஶ்ரீ நஜிப்- பிப். 2019இல் மீண்டும் விசாரணை


கோலாலம்பூர்-

1எம்டிபி விவகாரம் தொடர்பில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கிய டத்தோஶ்ரீ நஜிப், தம் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

10 லட்சம் வெள்ளி ஜாமீன், இரு நபர் உத்தரவாதத்தின் பேரில் டத்தோஶ்ரீ நஜிப் விடுதலை செய்யப்பட்டார். இந்த ஜாமீன் தொகையை இரு தவணைகளாக செலுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

முதலில் 5 லட்சம் வெள்ளி ஜாமீன் தொகையை அவரது மகனும் மகளும் செலுத்தினர்.  எஞ்சிய 5 லட்சம் வெள்ளி அடுத்த வாரம் செலுத்தப்படும்.

இவ்வழக்கு அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வரவுள்ளது, பிப்ரவரி 18 முதல் 28ஆம் தேதி வரையிலும் மார்ச் 4 முதல் 8 ஆம் தேதி வரையிலும் மார்ச் 11 முதல் 15 ஆம் தேதி வரையிலும் மொத்தம் 19 நாட்களுக்கு இந்த வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது.

இதனிடையே, டத்தோஶ்ரீ நஜிப்பின் பயண கடப்பிதழை நீதிமன்றம் பறிமுதல் செய்தது.

கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்திற்கு இன்று காலை அழைத்து வரப்பட்ட டத்தோஶ்ரீ நஜிப் மீது மூன்று மோசடி குற்றச்சாட்டுகளும் ஓர் அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டன.
 

No comments:

Post a Comment