Monday, 16 July 2018

பெட்ரோல் வெ.1.50ஆக குறையுமென மக்களை ஏமாற்ற வேண்டாம்- டத்தோஶ்ரீ நஜிப் சாடல்


கோலாலம்பூர்-
பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என வாக்குறுதி வழங்கிய பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் மக்களை ஏமாற்றக்கூடாது என முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார்.

ஹராப்பான் கூட்டணி வழங்கிய வாக்குறுதியை வழங்கியதுபோல் நிறைவேற்ற முடியாது என அவர் மேலும் சொன்னார்.

பெட்ரோல் விலையை 1.50 வெள்ளியாக குறைக்க முடியாது என்பது எனக்கு தெரியும். அதனால் பொய்யுரைக்க வேண்டாம்.

அதற்கான காரணம் என்னவென்பது நிதியமைச்சராக இருந்த எனக்கு தெரியும்.

பெட்ரோல் வேலை 1.50 வெள்ளியாக குறைந்திருந்தால் அதனை என்னால் அமலாக்கம் செய்திருக்க முடியும் என குறிப்பிட்ட டத்தோஶ்ரீ நஜிப்,  நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலின்போது ஆட்சியை கைப்பற்றினால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என பக்காத்தான் ஹராப்பான் வாக்குறுதி வழங்கியதை கடுமையாக சாடினார்.

No comments:

Post a Comment