Saturday, 21 July 2018
10 வாக்குறுதிகளில் இரண்டை நிறைவேற்றி விட்டோம்- துன் மகாதீர்
கோலாலம்பூர்-
பக்காத்தான் ஹராப்பான் வழங்கிய 10 வாக்குறுதிகள் இரண்டை நிறைவேற்றியுள்ளது என பிரதமர் துன் மகாதீர் முகம்மது தெரிவித்தார்.
தேர்தல் கொள்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட 100 நாட்களுக்குள் 10 வாக்குறுதிகள் என்பனவற்றில் இரண்டை நிறைவேற்றியுள்ளது.
இன்னும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தேர்தல் கொள்கையறிக்கையில் கூறப்படாத மக்களுக்கு நன்மையளிக்கக்கூடிய திட்டங்களையும் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
ஆட்சியமைத்த 70 நாட்களுக்குள்ளாகவே 2 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையில் துன் மகாதீர் இவ்வாறு கூறினார்.
இதற்கு முன்னதாக, மக்களவையில் பேசிய டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி, அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும் அவற்றை நிறைவேற்றுதில் தோல்வி கண்டுள்ளது எனவும் குற்றஞ்சாட்டினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment