Sunday, 15 July 2018

டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்- மஇகாவின் 10ஆவது தலைவரானார்


ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
மஇகாவின்  10ஆவது தேசியத் தலைவராக மேலவை சபாநாயகர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்றுக் காலை நடைபெற்ற மஇகா தேசியத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கலின் போது டான்ஶ்ரீ விக்னேஸ்வரனை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் தேர்தல் இன்றி அவர் தேசியத் தலைவராக அறிவிக்கப்பட்டார்.

மஇகாவின் 4,500 கிளைகளில் 75% விழுக்காடு கிளைகளின் முழுமையான ஆதரவை டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் பெற்றுள்ளார். 1,806 ஆதரவு மனுக்களை டான்ஶ்ரீ விக்கி பெற்றுள்ளார். இதன்வழி 3,412க்கும் மேற்பட்ட கிளைகள் அவரை ஆதரித்துள்ளன என அறிவிக்கப்பட்டது.

ஒருவேளை தேசியத் தலைவருக்கு போட்டி இருந்தால் 45,000 பேர் வாக்களிக்க நேர்ந்திருக்கும். அத்தகையதொரு இக்கட்டான சூழல் தவிர்க்கப்பட்டுள்ளது என நடப்பு தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் அறிவித்தார்.

மஇகாவின் புதியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனுக்கு மஇகாவினர் உட்பட   பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment