சிலாங்கூர் மாநில புதிய மந்திரி பெசாராக சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினர் அமிருடின் சாரி பதவியேற்றுக் கொண்டார்.
சிலாங்கூர் மாநில மந்திரி பெசாராக பதவி வகித்து வந்த டத்தோஶ்ரீ அஸ்மின் அலி, பொருளாதார விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டதை அடுத்து இப்பதவியிலிருந்து அவர் விலகினார்.
இன்று சிலாங்கூர் அரண்மனையில் நடைபெற்ற பதவியேற்புச் சடங்கில் சுல்தான் சராஃபுடின் ஷா முன்னிலையில் அமிருடின் சாரி மந்திரி பெசாராக பதவியேற்றுக் கொண்டார்.
No comments:
Post a Comment