Sunday, 10 June 2018

'சேவை மையம் எப்போது?'; தோல்வி கண்ட தேமு வேட்பாளர்களின் நிலையென்ன?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் நடந்து முடிந்து நேற்றோடு ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் ஆட்சியை கைப்பற்றிய பக்காத்தான் கூட்டணி, நாட்டின் நிர்வாகத் திறனை மேம்படுத்துவதோடு நாட்டை சூழ்ந்துள்ள ஊழல் புகார்களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளது.

இந்த ஒரு மாத காலத்தில் பக்காத்தான் கூட்டணி சட்டமன்ற, நாடாளுமன்ற வேட்பாளர்கள் தங்களது தொகுதிகளில் களப்பணி ஆற்றவும் மக்களை சந்திக்கவும் பக்காத்தான் கூட்டணி வேட்பாளர்கள் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர்.

சுயேட்சையாக களமிறங்கிய வேட்பாளர்களில் சிலர் தங்களது தொகுதிகளில் மக்களுக்கான களப்பணி ஆற்ற தொடங்கிவிட்ட  நிலையில் 'தோல்வி கண்டாலும் மக்களுக்காக சேவை செய்வோம்' என தேர்தல் பிரச்சாரத்தின்போது வாக்குறுதி அளித்த தேசிய முன்னணி வேட்பாளர்கள் என்ன ஆனார்கள்? என பலர் கேள்விகளை தொடுத்து வருகின்றனர்.

தேர்தல் தோல்வி அடைந்தவுடன் தலைநகருக்கும் பிற இடங்களுக்கும் சென்ற வேட்பாளர்கள், இன்னமும் தங்களது தொகுதிக்கு செல்லாதது? ஆதரவாளர்களிடையே ஓர் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் தோல்வி கண்டாலும் சேவை மையத்தை திறப்போம் என்ற சொந்த
வாக்குறுதியையே நிறைவேற்ற முடியாத இவர்களால் மக்களின் பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வு காண்பேன் என்ற வாக்குறுதியை மட்டும் எப்படி நிறைவேற்றுவார்கள்? என்ற கேள்வியே பலரிடத்தில் எழுந்து வருகிறது.

No comments:

Post a Comment