சென்னை-
நாளை 22ஆம் தேதி நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு 'விஜய் 62'இன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது.
'சர்கார்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.
'துப்பாக்கி, கத்தி' ஆகிய படங்களை தொடர்ந்து இணைந்துள்ள 'சர்கார்' திரைப்படம் தீபாவளி பெருநாளை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
No comments:
Post a Comment