Tuesday, 5 June 2018

மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது 'ஆஸ்ட்ரோ தமிழ்ச் செய்தி'

கோலாலம்பூர்-
ஜுன் 12ஆம் தேதி முதல் ஆஸ்ட்ரோ அலைவரிசையில் தமிழ்ச் செய்தி ஒளிபரப்பாகவுள்ளது. ஒவ்வொரு நாளும் இரவு 8.30 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் எச்.டி. அலைவரிசை 231இல் 'ஆஸ்ட்ரோ செய்திகள்' எனும் பெயரில் நேரடியாக  ஒளிபரப்பாகவுள்ளது.

இதன் மறு ஒளிபரப்பு இரவு 10.30 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசை  201இல் ஒளியேறும். அதுமட்டுமின்றி, ஆஸ்ட்ரோ உலகம் www.astroulagam.com.my இணையத்தளத்தின் வாயிலாகவும் இச்செய்தியை கண்டு களிக்கலாம்.

No comments:

Post a Comment