Tuesday, 5 June 2018

சட்டத்துறை தலைவர் நியமனம்; பிரதமரின் முடிவுக்கு அமைச்சர்கள் முழு ஆதரவு - டான்ஶ்ரீ முஹிடின் யாசின்


கோலாலம்பூர்-
நாட்டின் புதிய சட்டத்துறை தலைவராக மூத்த வழக்கறிஞர் டோம்மி தோமஸ் நியமனம் செய்யப்படுவதற்கு பிரதமர் துன் மகாதீர் எடுத்துள்ள முடிவுக்கு அமைச்சரவை முழு ஆதரவு வழங்கும் என உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இவ்விவகாரம் கூடிய விரைவில் சுமூகமாக தீர்க்கப்படும் என பிரிபூமி கட்சியின் தலைவருமான டான்ஶ்ரீ முஹிடின் யாசின் கூறினார்.

சட்டத்துறை சார்ந்த விவகாரங்களை துரிதமாக மேற்கொள்ள ஒவ்வொரு நகர்வும் மிக முக்கியமானது என்பதால் பிரதமர் எடுத்துள்ள முடிவுக்கு அமைச்சர்கள் முழு ஆதரவு வழங்குவர்.

இவ்விவகாரம் தொடர்பில் பிரதமரும் மாமன்னரும் சுமூகமான முறையில் தீர்வு காண்பர் என நம்புவதாக அவர் சொன்னார்.

No comments:

Post a Comment