Sunday, 17 June 2018

நிதி முறைகேடு, சொத்து மோசடி; நஜிப் மீது குற்றஞ்சாட்டப்படலாம்?

கோலாலம்பூர்-
1எம்டிபி நிறுவன முறைகேடு தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் மீது நிதி முறைகேடு, சொத்து மோசடி ஆகிய வழக்குகள் பதியப்படலாம் என கூறப்படுகிறது.

2009இல் 1எம்டிபி-யை தொடங்கிய நஜிப்,  அதற்கு வந்த பல கோடி வெள்ளியை நிறுவன வங்கி கணக்கில் சேர்க்காமல் சொந்த வங்கி கணக்கில் சேர்த்ததாக அவர் மீதான குற்றச்சாட்டு நிலவுவதாக 1எம்டிபி விசாரணை குழு தெரிவித்தது. ஆயினும் இந்த குற்றச்சாட்டை டத்தோஶ்ரீ நஜிப் மறுத்து வருகிறார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் 1எம்டிபி அறிக்கையை முழுமையாக ஆராய்ந்ததும்  நஜிப் மீது குற்றவியல் பதிவுகள் பதிவு செய்வதற்கான அதிக வாய்ப்புள்ளதாக புதிய அட்டெர்னி ஜெனரல் டொம்மி தோமஸ் முன்பு கூறியிருந்தார்.

அனைத்து தரப்பு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதும் உரிய ஆதாரங்கள் கைக்கு வந்த பின்னர் நஜிப் மீது என்னென்ன குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்பதை அட்டெர்னி ஜெனரலே முடிவு செய்வார்.

No comments:

Post a Comment