ரா.தங்கமணி
ஈப்போ-
பேரா மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகள், மாணவர்கள் நலனை மேம்படுத்த தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் மாநில அரசுக்கு பேராதரவு வழங்க வேண்டும் என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் வலியுறுத்தினார்.
134 தமிழ்ப்பள்ளிகளைக் கொண்டுள்ள பேரா மாநிலத்தில் பல தமிழ்ப்பள்ளிகள் அடிப்படை பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன. அதே போன்று பல மாணவர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.
இதுபோன்ற பிரச்சினைகளை களைய மாநில அரசு எப்போதும் தயாராக இருக்கும். அதற்கு நான் உறுதி கூறிகிறேன். தமிழ்ப்பள்ளி, மாணவர்கள் நலனுக்கு யார் தடையாக இருந்தாலும் அது மந்திரி பெசாராகவே இருந்தாலும் எதற்கும் அஞ்ச மாட்டேன்.
தமிழ்ப்பள்ளி, மாணவர்களின் நலனுக்காக ஆக்ககரமான திட்டங்களை முன்னெடுக்க தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்களின் பங்களிப்பு மிக அவசியமாகிறது. உங்களது ஒத்துழைப்பு முழுவதுமாக இருந்தால் நிச்சயம் இந்த ஐந்தாண்டுக்குள் பல்வேறு மாற்றங்களை நாம் முன்னெடுக்க முடியும் என இன்று காலை மாநில அரசு செயலக சந்திப்பு கூடத்தில் நடைபெற்ற பேரா மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்ற செயலவைக் கூட்டத்திற்கு பின்னர் உரையாற்றியபோது சிவநேசன் இவ்வாறு கூறினார்.
இந்த மன்றத்திற்கு மாநில அரசின் சார்பாக 10,000 வெள்ளி வழங்குவதாக சிவநேசன் உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் மன்றத்தின் தலைவர் பத்மா, பேரா மாநில கல்வி இலாகா உதவி இயக்குனர் சந்திரசேகரன், பேரா மாநில தமிழ்ப்பள்ளிகளின் கண்காணிப்பாளர் சுப.சற்குணன் உட்பட செயலவையினர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment