புத்ராஜெயா-
எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்தில் நிகழ்ந்துள்ள முறைகேடுகள் குறித்து மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) விசாரணைக்காக முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் டத்தின்ஶ்ரீ ரோஸ்மா மன்சோர் புத்ராஜெயாவிலுள்ள எம்ஏசிசி தலைமையகத்திற்கு வருகை புரிந்தார்.
இவ்விவகாரம் தொடர்பில் டத்தோஶ்ரீ நஜிப்பிடம் எம்ஏசிசி விசாரணை நடைபெற்று முடிந்த இரு வாரங்களுக்கு பின்னர் டத்தின்ஶ்ரீ ரோஸ்மாவிடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
இன்று காலை 10.33 மணியளவில் எம்ஏசிசி அலுவலகத்திற்கு வந்த அவர் ஊடகவியலாளர்களை பார்த்து சிரித்த போதிலும் எவ்வித கருத்துகளையும் சொல்லவில்லை.
No comments:
Post a Comment