லங்காவி-
மங்கோலிய மாடல் அழகி அல்தான் துயாவை தான் சந்தித்ததற்கான ஆதாரங்கள் ஏதும் கிடையாது என முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் கூறியுள்ளார்.
டத்தோஶ்ரீ நஜிப்பை நேர்காணல் செய்த 'ராய்ட்டர்ஸ்' நிறுவனம் அல்தான் துயா பற்றி கேள்வி எழுப்பியபோது, 'அல்தான் துயா வழக்கு முடிந்துபோன ஒன்று. நான் அவரை சந்தித்ததற்கான எவ்வித ஆதாரங்களும் கிடையாது. அவரை எனக்கு தெரியும் என்பதற்காக எவ்வித ஆவணங்களும் புகைப்படங்களும் கிடையாது.
இந்த வழக்கு நேர்மையாக நடந்து முடிந்து விட்டது. வழக்கு விசாரணையின்போது கூட என் பெயர் ஓரிடத்திலும் இடம்பெறவில்லை' என அவர் இந்த நேர்காணலின்போது கூறினார்.
No comments:
Post a Comment