ஜப்பானில், ஒசாகா மாகாணத்தை உலுக்கிய வலுவாக நிலநடுக்கத்தில் மூவர் மரணமடைந்ததோடு 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை உள்ளூர் நேரப்படி 7.58 மணிக்கு 5.9 ரிக்டர் அளவுகோலில் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து கட்டடங்கள் சரிந்து விழுந்தது. இதில் சிக்கிய சிலர் மரணமடைந்தனர். அதில் 9 வயது சிறுமியும் அடங்குவாள்.
இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் 6.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டால் மட்டுமே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படும் எனவும் ஜப்பான் புவியியல் மையம் தெரிவித்தது.
No comments:
Post a Comment