ரா.தங்கமணி
ஈப்போ-
பேரா மாநிலத்தில் நிலவும் டிங்கி காய்ச்சல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ரசாயன கலவையற்ற கொசு ஒழிப்பு மருந்து பயன்படுத்துவது பரிசோதனை முறையில் முன்னெடுக்கப்படும் என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்தார்.
ஏடிஸ் கொசுக்களை ஒழிப்பதற்காக தற்போது தெளிக்கப்படும் மருந்து ரசாயன கலவை மிகுந்தது என்பதோடு அதனை வீட்டிற்கு வெளியே மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். ரசாயன கலவையால் வீட்டிற்குள் மருந்து தெளிப்பதில்லை.
இந்நிலையில் ரெவோகனிக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ரசாயன கலப்பில்லாத கொசு ஒழிப்பு மருந்தை சோதனை முறையில் மேற்கொள்ளவிருப்பதாக அவர் சொன்னார்.
தற்போது டிங்கி காய்ச்சல் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள பகுதியில் இந்த மருந்தை பயன்படுத்தப்படவுள்ளது. இம்மருந்தை தெளிப்பதன் மூலம் சாதகமான பதில் கிடைக்கப்பெற்றால் அனைத்து இடங்களிலும் இம்மருந்தை தெளிப்பதற்கு சுகாதார அமைச்சுக்கு பரிந்துரை செய்யப்படும் என மாநில சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினராக சிவநேசன் தெரிவித்தார்.
கடந்தாண்டை காட்டிலும் இவ்வாண்டு டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் அதிகளவு குறைந்துள்ளது. இவ்வாண்டு தொடக்கம் 2018 மே 19 வரை 1,1,97 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இதே காலாண்டில் கடந்தாண்டு 3,295 புகார்கள் பதிவு செய்யப்பட்டன.
டிங்கி ஒழிப்புக்காக தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் மருந்து கலவையில் டீசல் எண்ணெய் கலக்கப்படுவதால் அது சிறப்பானதாக கருத முடியாது. ரசாயன கலப்பற்ற இந்த 'ரெவோகெனிக்ஸ்' மருந்து பயன்படுத்துவதால் வீட்டிற்கு வெளியில் மட்டுமல்லாது வீட்டுக்குள்ளேயும் பயன்படுத்தலாம்.
டிங்கி ஒழிப்பிற்காக தற்போது இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இந்த மருந்து பயன்படுத்தப்படும் நிலையில் சோதனை முன்னோட்டமாக இங்கு பரிசோதிக்கப்படும் எனவும் சாதகமான சூழல் நிலவினால் தற்போதைய மருந்துக்கு பதிலாக இதனை பயன்படுத்த சுகாதார அமைச்சுக்கு பரிந்துரைக்கப்படும் எனவும் இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சிவநேசன் இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment