கோலாலம்பூர்-
பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களுடன் சுமூகமாக பணியாற்றுவதில் தோல்வி கண்டால் தாம் பதவியிலிருந்து விலக நேரிடும் என பிரதமர் துன் மகாதீர் முகம்மட் தெரிவித்தார்.
14ஆவது பொதுத் தேர்தலில் ஆட்சியமைக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ள பக்காத்தான் ஹராப்பானின் பிரதமராக துன் மகாதீர் பதவியேற்று செயலாற்றி வருகிறார்.
இதனிடையே, தமக்கும் பக்காத்தான் கூட்டணி தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்களுடன் தொடர்ந்து தம்மால் பணியாற்ற முடியாது என்ற சூழல் ஏற்படும்போது உடனடியாக தாம் பதவி விலக நேரிடும் என 'சேனல் நியூஸ் ஆசியா' எனும் சிங்கை தொலைகாட்சிக்கு அளித்த நேர்காணலில் இவ்வாறு கூறினார்.
ஆயினும் 'முன்பி தாம் பிரதமராக இருந்தபோது தம்மை பலர் எதிர்த்த போதிலும் அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றுள்ளதை சுட்டிக் காட்டிய அவர், தாம் இப்போது அவ்வாறு செய்ய முடியாது' என இதற்கு முன்பு 22 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்த துன் மகாதீர் இவ்வாறு சொன்னார்.
No comments:
Post a Comment