கோலாலம்பூர்-
நாட்டின் புதிய சட்டத்துறை தலைவராக நியமனம் செய்ய மூத்த வழக்கறிஞர் டோம்மி தோமஸ் பெயரை மட்டுமே அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது. அப்பதவிக்கு பிறரது பெயர்கள் பரிந்துரைக்கவில்லை என பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.
ஒருவரின் பெயரை மட்டுமே அரண்மையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதை உறுதிபடுத்திய அவர், சட்டவிதிகளுக்கு அந்த பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது என அவர் சொன்னார்.
கூட்டரசு அமைப்பு சட்டவிதிகளின் படி பிரதமரின் ஆலோசனையுடன் சட்டத்துறை தலைவர் ஒருவரை மாமன்னர் நியமனம் செய்யலாம் என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment