கோலாலம்பூர்-
நாட்டின் புதிய சட்டத்துறை தலைவராக டொம்மி தோமஸ் நியமனம் செய்யப்படுவதற்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் முகமட் வி அனுமதி வழங்கியுள்ளார்.
கூட்டரசு அமைப்பு 145 (1) சட்டவிதியின்படி பிரதமர் துன் மகாதீர் முகமதுவின் ஆலோசனைபடி இந்த நியமனம் செய்யப்படுவதாக அரண்மனை பேச்சாளர் வான் அஹ்மாட் டஹ்லான் அப்துல் அஸிஸ் கூறினார்.
'அட்டெர்னி ஜெனரல் நியனம விவகாரத்தில் எவ்வித இன,மத உணர்வுகளை தூண்டாமல் இம்முடிவை மலேசியர்கள் அனைவரும் ஏற்குமாறு மாமன்னர் வலியுறுத்தியுள்ளார் என அவர் கூறினார்.
முன்னாள் சட்டத்துறை தலைவர் அபாண்டி அலிக்கு பதிலாக டொம்மி தோமஸை புதிய சட்டத்துறை தலைவராக நியமனம் செய்யக்கோரி மாமன்னருக்கு பிரதமர் துன் மகாதீர் பரிந்துரைத்திருந்தார்.
No comments:
Post a Comment