ஷா ஆலம்—
சிலாங்கூர் மாநிலத்தின்
புதிய மந்திரி பெசாராக பதவியேற்றுள்ள அமிருடின் ஷாரி தனது முதல் நாள் பணியை இன்று தொடங்கியதைத்
தொடர்ந்து, பிற்பகல் 2.30 மணியளவில் பிரதமர் துன் டாக்டர் மகாதீரை நேரடியாகச் சென்று
சந்தித்தார்.
சிலாங்கூர் மாநிலத்தின்
மேம்பாட்டு திட்டங்கள் குறித்து ஆலோசனை பெறுவதற்கு அமிருடின் சுமார் 40 நிமிடங்கள்
பிரதமரிடம் கலந்து பேசினார்.
சிலாங்கூர் மாநிலத்தை
ஆட்சி செய்வதற்கு பிரதமர் வழங்கிய ஆலோசனை முக்கியமானதாகவும் பயனுள்ளதாகவும் அமைவதால்
அதை தாம் முழுமையாக ஏற்றுக் கொண்டு இம்மாநிலத்தின் மேம்பாட்டுக்கு நிச்சயம் பாடுபடுவேன்
என்றார் அமிருடின்.
No comments:
Post a Comment