Thursday, 14 June 2018
தேமுவின் பரிதாப நிலை; "நல்லா இருந்த கட்சி.... இப்படி ஆயிடுச்சே'
ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
நாட்டை 60 ஆண்டுகளாக ஆட்சி செய்த தேசிய முன்னணி கூட்டணிக்கு 14ஆவது பொதுத் தேர்தலில் விழுந்த அடி, இன்று அதனை அதாள பாதாளத்தில் தள்ளியுள்ளது.
13 பங்காளி கட்சிகளுடனும் சில தோழமை கட்சிகளுடனும் அதிகார வர்க்கத்தில் இருந்து 'மக்கள் ஆட்சி'க்கு பதிலாக 'அரசியல் ஆட்சி'யை புரிந்து வந்தது.
இன ரீதியிலான கட்சிகளை உள்ளடக்கி கூட்டணியில் 13 உறுப்புகளோடு கம்பீரமாக மிளிர்ந்த தேசிய முன்னணியின் கூடாரம் இன்று காலியாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
14ஆவது பொதுத் தேர்தலுக்கு பின்னர் ஆட்சியையும் அதிகார பலத்தையும் இழந்து தவிக்கும் தேசிய முன்னணியின் கூட்டணியிலிருந்து இதுவரை 9 கட்சிகள் வெளியேறி விட்டன. இன்னமும் 4 கட்சிகளுடன் மட்டுமே தேசிய முன்னணீ கூடாரம் நிலைத்து நிற்கிறது.
அம்னோ, மசீச, மஇகா, கெராக்கான் ஆகிய நான்கு கட்சிகள் மட்டுமே தேமுவை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் ஒரு கட்சி கழன்றி கொண்டாலும் தேமு கூடாரம் மொத்தமாக சாய்ந்து விடும்.
பொதுத் தேர்தல் நடந்து முடிந்து ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில் 9 கட்சிகளில் வெளியேறி வெறும் 4 கட்சிகளுடன் மட்டுமே தற்போது திகழும் தேசிய முன்ணியை நினைத்து 'நல்லா இருந்த கட்சி நிலைமை இப்படி ஆயிடுச்சே' என புலம்பும் நிலைதான் ஏற்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment