பத்துமலை திருத்தல வளாகத்தில் நடத்தப்பட்ட அமைதி பேரணி குறித்து போலீஸ் விசாரணை நடத்தும் என கோம்பாக் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் சூப்பிரிடெண்டன்ட் தெய் கொங் செங் கூறினார்.
அரசு சார்பற்ற இயக்கம் ஒன்றில் ஏற்ட்டில் நேற்று நடைபெற்ற இந்த அமைதி பேரணியில் 200 ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த அமைதி பேரணி தொடர்பான விவகாரத்தை செக்ஷன் 9 (5) அமைதி
பேரணி 2012இன் கீழ் விசாரிக்கப்படும் என அவர் சொன்னார்.
பத்துகேவ்ஸ் ஆலயத்தின் முன்பு அமைதி பேரணி நடத்துவதற்கு ஆலய நிர்வாகம் இடைக்கால தடையுத்தரவு பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment