Tuesday, 5 June 2018

பூக்களின் மன்னன் ‘பெட்டல் ஃபுலோரிஸ்’ ஏற்பாட்டில் பூ அலங்காரம், விற்பனை பயிலரங்கு



இந்திய வர்த்தகர்களை உருவாக்கும் திட்டத்தில் அதிகமான இந்தியர்கள் பங்குக் கொள்ள அறிய வாய்ப்பாக பூக்களின் மன்னன் பெட்டல் ஃபுலோரிஸ் மற்றும் மலேசிய மலர் விநியோகர் சங்கம் ஏற்பாட்டில் வருகின்ற 10.6.2018 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 2.00 மணிக்கு மலாக்கா, ஸ்ரீ நெகிரி ஆயிர் குரோவிலுள்ள அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் பூ அலங்காரம், பூ விற்பனை, இணையத்தின் வழி பூக்கள் மற்றும் மலர் விற்பனை தொடர்பான பயிலரங்கும் அதன் கருத்தரங்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வுக்கு மலாக்கா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் சாமிநாதன் கனேசன் மற்றும் பிற வர்த்தகர்களும் கலந்துக் கொள்ளவுள்ளனர். பூ விற்பனையில் ஈடுபட ஆர்வமுள்ள மலேசியர்கள் இதில் பங்கேற்கலாம். சிறு தொழிலில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள விரும்புவோர், கல்லூரி மற்றும் பல்கலைகழக மாணவர்கள், தனித்து வாழும் தாய்மார்கள், சுற்றுவட்டார பொதுமக்கள் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளுமாறு ஏற்பாடு குழு சார்பாக ஏற்பாட்டுக்குழுத் தலைவர் வர்மா கேட்டுக் கொண்டார். மேல் விபரங்களுக்கும் முன் பதிவுக்கும் 0102117333 (எபி) தொடர்புக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment