Sunday, 3 June 2018

'மைக்கி' தலைவர் பதவியிலிருந்து கென்னத் ஈஸ்வரன் விலக வேண்டும்- பிஐசிசி நெருக்குதல்

புனிதா சுகுமாறன்

ஈப்போ-
வர்த்தகர்களின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட மானியங்களை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளை புரிந்துள்ள மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளனத்தின் (மைக்கி) தலைவர் டான்ஶ்ரீ கென்னத் ஈஸ்வர உடனடியாக அப்பதவியிலிருந்து விலக வேண்டும் என பேரா இந்திய வர்த்தக சபை நெருக்குதல் அளித்துள்ளது.

கடந்த காலங்களில் மைக்கி-க்கு வழங்கப்பட்ட நிதி அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டது முதல் தவறாகும். 2013இல் மைக்கி-க்கு வழங்கப்பட்ட நிதியில் 2.3 மில்லியன் வெள்ளி அப்போதைய தேசிய முன்னணியின் அரசியல் பிரச்சாரங்களுக்காக  பயன்படுத்தப்பட்டது.

இது குறித்து  எந்த வர்த்தக சபையினரும் கேள்வி கேட்க முடியாது. அவ்வாறு கேள்வி எழுப்பினார்  பேரா இந்திய வர்த்தக சபை போல நீக்கம் செய்யப்படுவர் என அதன் தலைவர்  ஹாஜி சுல்தான் அப்துல் காடீர் தெரிவித்தார்.

பேரா மாநில வர்த்தக சபைக்கு வழங்கப்பட வேண்டிய 125,000 வெள்ளி   வழங்கப்படவில்லை. இது குறித்துஆர்.ஓ.எஸ், எம்ஏசிசி ஆகியவற்றிடம்ம் புகார் அளித்துள்ளோம்.

அதோடு 2013இல் தேசிய அளவிலான இந்திய தொழில் முனைவர்களுக்கு 40,000 வெளிநாட்டு தொழிலாளர்களை தருவிக்க ஒருவருக்கு 500 வெள்ளி வழங்குவதற்கு மைக்கி அப்போதைய அரசாங்கத்திடம் அனுமதி பெற்றிருந்தது. ஆனால் அது எந்த தொழில் முனைவர்களுக்கும் வழங்காமல் தனது ஆதாயத்திற்காக பயன்படுத்தினார் கென்னர் ஈஸ்வரன்.

அதுமட்டுமின்றி தேசிய முன்னணியின் வெற்றிக்காக மைக்கியின் மானியத்தை தவறான முறையில் பயன்படுத்தியுள்ளதோடு வர்த்த அமைப்பை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தி கொண்டதற்காகவும் டான்ஶ்ரீ கென்னத் ஈஸ்வரன் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இச்சந்திப்பின்போது பிஐசிசி-இன் முன்னாள் தலைவர் எம்.கேசவன், செயலவை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment