கோலாலம்பூர்-
தேசிய இருதய கழகத்தில் (ஐஜேஎன்) அனுமதிக்கப்பட்டுள்ள இந்தியா, தெற்காசிய நாடுகளுக்கான சிறப்பு கட்டமைப்பு தூதர் துன் ச.சாமிவேலுக்கு 'மாரடைப்பு' என சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதை மறுத்தார் அவரின் பத்திரிகை செயலாளர் டத்தோ ஈ.சிவபாலன்.
மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவருமான 82 வயதான துன் சாமிவேலு இன்று வீட்டில் நிகழ்ந்த குடும்ப நிகழ்வுக்கு பின்னர் கேஎல் சென்டரலில் உள்ள அலுவலகத்திற்கு வந்தார். உணவு ஜீரணிக்காமல் வாந்தி எடுக்கவே பரிசோதனைக்காக ஐஜேஎன்-க்கு அழைத்து செல்லப்பட்டார்.
ஐஜேஎன்-இல் அனுமதிக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் (துன்) நலமாக உள்ளார் என சிவபாலன் கூறினார்.
ஐஜேஎன்- இல் அவர் அனுமதிக்கப்பட்டது தொடர்பில் பொய்யான தகவல்கள் சமூக வலைதளத்தில் பகிரப்படும் சூழலில் அதனை யாரும் நம்ப வேண்டாம் அவர் கேட்டுக் கொண்டார்.
No comments:
Post a Comment