கோலாலம்பூர்-
பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகம்மது தலைமையில் அமையவுள்ள அமைச்சரவையில் நானும் இடம்பெற்றுள்ளேன் என வெளிவந்துள்ள தகவல் ஊடகங்களின் கணிப்பே ஆகும். ஆதலால் அதன் உண்மை நிலவரம் தெரியாமல் கருத்துரைக்க முடியாது என டாக்டர் சேவியர் ஜெயகுமார் கூறினார்.
ஊடகங்களின் கணிப்பில் வெளிவந்துள்ள அமைச்சரவை பட்டியல் அங்கீகரிக்கப்பட்டதல்ல. அது யூகத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டதாகும்.
இந்த பட்டியல் உண்மை தானா? என தெரியாமல் மேல் விவரம் குறித்து கருத்துரைக்க முடியாது என அவர் சொன்னார்.
நேற்று வெளியான அமைச்சரவை பட்டியல் ஒன்றில் நீர், நிலம், இயற்கை வள அமைச்சராக டாக்டர் சேவியர் ஜெயகுமார் இடம்பெறுவார் என கூறப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment