கோலாலம்பூர்-
கூடிய விரைவில் அமையவுள்ள அமைச்சரவையில் கோலலங்கார் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமார், ஹிண்ட்ராப் அமைப்பின் தலைவர் பி.வேதமூர்த்தி அமைச்சர்களாக நியமிக்கப்படக்கூடும் என அறியப்படுகிறது.
இவ்வாரம் அல்லது அடுத்த வாரம் தொடக்கத்தில் முழுமையான அமைச்சரவை பட்டியலை பிரதமர் துன் மகாதீர் முகம்மது அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் அடிப்படையில் சேவியர் ஜெயகுமார் நீர்வள, சுற்றுச்சூழல் அமைச்சராகவும் பொ.வேதமூர்த்தி பிரதமர் துறை (இந்தியர் விவகாரப் பிரிவு) அமைச்சராகவும் பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
No comments:
Post a Comment