Tuesday, 12 June 2018

புதிய தேசிய கார் நிறுவனம் தொடங்க மலேசியா இலக்கு- துன் மகாதீர்


தோக்கியோ-
தேசிய கார் நிறுவனமான புரோட்டோனுக்கு பதிலாக புதிய தேசிய கார் நிறுவனம் தொடங்கப்படுவதற்கு மலேசியா இலக்கு கொண்டுள்ளது  என பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.

இந்த புதிய கார் நிறுவனத்தை பிற நாடுகளின் கூட்டுஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் என அவர் சொன்னார். ஜப்பான், சீனா, தென் கொரியா, தாய்லாந்து ஆகிய நாடுகளே அவை ஆகும்.

புதிய கார் திட்டத்துடன்  உலகச் சந்தையில் நாம் நுழைய வேண்டும் என தோக்கியோவில் நடைபெற்று வரும் நிக்கி மாநாட்டில் உரையாற்றியபோது துன் மகாதீர் இவ்வாறு கூறினார்.

துன் மகாதீர் ஜப்பானுக்கு மூன்று நாள் அதிகாரத்துவ பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment