சுங்கை சிப்புட்-
மஇகாவின் 5ஆவது தேசியத் தலைவரும் கூட்டுறவு தந்தையுமான துன் வீ.தி.சம்பந்தனின் 99ஆவது பிறந்தநாள் பிரார்த்தனை விழா வரும் 24ஆம் தேதி பிற்பகல் 3.00 மணிக்கு சுங்கை சிப்புட், தாமான் ஹீவூட், சத்திய சாய் பாபா மையத்தில் துன் சம்பந்தன் சமூகநல பொது இயக்கம், சுங்கை சிப்புட் துன் சம்பந்தன் பிறந்தநாள் விழா குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.
'சங்கநதி' எனும் சுங்கை சிப்புட் நகருக்கு பெருமை சேர்த்த துன் சம்பந்தனின் பிறந்தநாள் பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து நிகழ்வை சிறப்பிக்குமாறு நிகழ்வு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் கி.மணிமாறன் கேட்டுக் கொண்டார்.
No comments:
Post a Comment