Friday, 15 June 2018

7 தேமு வேட்பாளர்களின் வெற்றியை எதிர்த்து பிபிபிஎம் மேல் முறையீடு


பெட்டாலிங் ஜெயா-
நடந்து முடிந்த 14ஆவது பொதுத் தேர்தலில் 4 நாடாளுமன்றத் தொகுதிகள், 3 சட்டமன்றத் தொகுதிகளின் வெற்றியை எதிர்த்து பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பிபிபிஎம்)  மேல் முறையீடு செய்துள்ளது.

இந்த 7 தொகுதிகளும்  தேசிய முன்னணி வேட்பாளர்களின் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்த்ய் பிரிபூமி கட்சியினர் இடைத் தேர்தலை கோருகின்றனர்.

பினாங்கில் தாசேக் குளுகோர், நெகிரி செம்பிலானின் ஜெம்போல், பேராவில் தாப்பா, பாகான் செராய் ஆகிய 4 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பேராவில் லுபோக் மெர்பாவ், சங்காட் ஜோங், ஜோகூரில் கஹாங் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்ற தேமு வேட்பாளர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது என பிபிபிஎம் கட்சியின் சட்ட விவகாரப் பிரிவு செயலாளர் மியோர் நோர் ஹைடிர் கூறினார்.

தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் மஇகாவின் மத்திய செயலவை உறுப்பினர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் தேமு சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.

மேலும், கேமரன் மலையில் வெற்றி பெற்றுள்ள மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சி.சிவராஜின் வெற்றியை எதிர்த்து ஜசெகவின் மனோகரன் மலையாளம் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment