Thursday, 7 June 2018

சுற்றுலா துறையை மேம்படுத்த 4 அம்சங்களில் கூடுதல் கவனம்- பேரா அரசு


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
பேரா மாநில சுற்றுலா துறையை மேம்படுத்த 4 அம்ச திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என மாநிலசுற்றுலா, கலை, பண்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் டான் கர் ஹிங் தெரிவித்தார்.

மாநிலத்தில் பல சுற்றுலா தளங்கள் இருந்த போதிலும் அதனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மிகவும் குறைந்தே காணப்படுகின்றன.

அதனை மேம்படுத்துவம் வகையில்  சுற்றுலா படைப்புகள்,பன்முகத்தன்மை, அடையாளப்படுத்துதல், சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை உறுதி செய்தல் போன்ற  4 அம்சங்களில் கவனம் செலுத்தப்படும்.

இதன் தொடர்பில் விளையாட்டு நிறுவங்களுடன் பரிந்துரை முன்வைக்கப்பட்டு ஆக்ககரமான திட்டங்களை மேற்கொள்ள ஆக்ககரமான திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

குறுகிய கால நடவடிக்கையாக ஆட்சிக்குழுவில் விவாதிக்கப்பட்டு திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான நல்லெண்ண விருந்து நிகழ்வில் உரையாற்றும்போது டான் கர் ஹிங் கூறினார்.

ஆட்சி வகிக்கக்கூடிய இந்த 5 ஆண்டுகளில் சுற்றுலாத் துறை மேம்படுத்தி அதன் வழி மாநில சுற்றுலாத் துறை ஒரு வலுவான துறையாக மாற்ற நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment