Sunday 3 June 2018

மை இஜி உட்பட 3 நிறுவனங்களின் சேவையை நிறுத்திக் கொள்கிறது குடிநுழைவுத் துறை


பெட்டாலிங் ஜெயா-
மை இஜி உட்பட 3 நிறுவனங்களின் சேவையை நிறுத்துக் கொள்ள குடிநுழைவுத் துறை முடிவெடுத்துள்ளது.

அந்நிய நாட்டவர்களின் ஆவணங்களை புதுப்பித்தல் உட்பட பல சேவைகளை வழங்கி வந்த மை இஜி செர்விஸ் சென்டர் (MyEG),  இமான் ரிசோர்ஸஸ் சென்,பெர்., புக்கிட் மெகா சென்.பெர். ஆகிய மூன்று நிறுவனங்களின் சேவை இம்மாத இறுதி வரை மேற்கொள்ளப்படும் என உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ முஹிடின் ஹாசின் தெரிவித்தார்.

இந்த மூன்று நிறுவனங்களும் குடிநுழைவு துறையைச் சேர்ந்த அந்நிய நாட்டவர்களின் ஆவணங்களை மறு ஆய்வு  செய்தல், சமர்ப்பித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்த நிறுவனங்கள் அனைத்திலும் அம்னோவினர் சார்ந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment