Monday, 4 June 2018

பேருந்து- லோரி மோதல்; 3 பேர் பலி- 25 பேர் படுகாயம்

மூவார்-
பயணிகள் பேருந்தும் கனரக லோரியும் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததோடு  25 பேர் படுகாயமடைந்தனர்.

வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையின் பாகோ அருகில் இவ்விபத்து நிகழ்ந்தது. இதில் 50 வயது மதிக்கத்தக்க  பேருந்து ஓட்டுனர்  கே.கே.முகம்மட் பலியானார். மேலும் இரு பெண்மணிகளும் பலியாகினர்.

பிற்பகல் 1.08 மணியளவில் கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மூவார் தீயணைப்புப் படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment