Friday, 8 June 2018

வெ. 2.66க்கு உயர்ந்தது ரோன் 97

புத்ராஜெயா- 
ரோன் 97 பெட்ரோல் விலை 22 காசு உயர்வு கண்டு 2.66 வெள்ளியாக விற்பனை செய்யப்படும் என நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

ரோன் 95, டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாத நிலையில் இவ்வாரம் ரோன் 97 பெட்ரோல்   22 காசு உயர்வு கண்டுள்ளது என்றார் அவர்.
இன்று அதிகாலை 12.00 மணியிலிருந்து உயர்வு கண்ட ரோன் 97 பெட்ரோல் விலை, வரும் 13ஆம் தேதி தொடரப்படும்.

இதற்கு முன் ரோன் 97 பெட்ரோல்  2.44 வெள்ளியாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று தொடங்கி அமலுக்கு வருகிறதும் என்றார் அவர்.

நிலை நிறுத்தப்பட்ட ரோன் 95, டீசல்

ரோன் 95 பெட்ரோல் , டீசல் ஆகியவற்றின் விலை இவ்வருடம் வரை எவ்வித மாற்றமும் காணப்படாது.  தற்போது சந்தையில் ரோன் 95 பெட்ரோல் 2.20 வெள்ளியாகவும் டீசல் 2.18 வெள்ளியாகவும் விற்கப்படுகிறது.

இவ்விரு எரிபொருளுக்கும் 33 காசு அரசாங்க மானியமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான இவ்வாண்டு வரை 3 பில்லியன் வெள்ளி மானியத்தை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

No comments:

Post a Comment