Monday, 2 July 2018
2,000 ஏக்கர் நில வாரியக் குழுவில் மாநில அரசு பிரதிநிதியை இணையுங்கள்
ரா.தங்கமணி
ஈப்போ-
பேரா மாநில தமிழ்ப்பள்ளிகள், மாணவகர்களின் மேம்பாட்டுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 2,000 ஏக்கர் நிலத்தை பராமரிக்கும் பேரா இந்திய மாணவர்கள் மேம்பாட்டு வாரியக்குழு பதவி விலக வேண்டும் என பேரா தமிழ்ப்பள்ளிகள் தீர்வுக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த தேசிய முன்னணி ஆட்சியின்போது அமைக்கப்பட்ட இந்த வாரியக்குழுவில் தேசிய முன்னணி, மஇகாவைச் சேர்ந்தவர்களே உறுப்பினர்க்ளாக உள்ளனர்.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் மத்திய, மாநில அரசுகளை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெற்றுள்ளதால் தற்போது எதிர்க்கட்சியாக உள்ள அதன் இயக்குனர்கள் பதவி விலக வேண்டும் என அதன் தலைவர் செல்வம், துணைத் தலைவர் சிம்மாதிரி, செயலாலர் பெரு. நித்தியானந்தர் ஆகியோர் வலியுறுத்தினர்.
இந்த 2,000 ஏக்கர் நிலம் மாநில அரசு ஒதுக்கியது. அதனை நிர்வகிக்கவே இந்த வாரியக்குழு அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த கால ஆட்சியில் அவர்கள் பொறுப்பில் இருந்தனர். இப்போது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி மாநில ஆட்சியை கைப்பற்றியுள்ளதால் இந்த வாரியக்குழுவில் தற்போது எதிர்க்கட்சியாக உள்ள பொறுப்பாளர்கள் அப்பதவியிலிருந்து விலக வேண்டும்.
இல்லையேல், இந்த வாரியக் குழுவில் தற்போதைய மாநில அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் வாரிய உறுப்பினராக நியமனம் செய்யப்பட வேண்டும்.
எங்களிடமும் தகுதியானவர்கள் இருக்கின்றனர் என்ற நிலையில் அவர்கள் பதவி விலக வேண்டும் அல்லது மாநில அரசின் பிரதிநிதியை சேர்க்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment