ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது கட்சி தாவல் செய்வதற்கு 20 மில்லியன் வெள்ளி விலை பேசப்பட்டது. ஆனால் பணத்திற்காக தாம் விலை போகவில்லை என சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் தெரிவித்தார்.
2008ஆம் ஆண்டு பேரா மாநில ஆட்சியை கைப்பற்றிய மக்கள் கூட்டணியை கவிழ்ப்பதற்கு பேரங்கள் பலமாக பேசப்பட்டது. மக்கள் கூட்டணி சார்பில் ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது தேமுவுக்கு அணி மாற 20 மில்லியன் வெள்ளி பேரம் பேசப்பட்டது.
ஆனால் அந்த பேரத்திற்கு மதி மயங்காமல் 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்து பல சோதனைகளுக்கு மத்தியில் சிறந்த சேவையை வழங்கினேன்.
அதன் பயனாக 14ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட கட்சி மேலிடம் வாய்ப்பளித்தது என கமுனிங் இளைஞர் மன்றம், சுங்கை சிப்புட் அரசு சாரா பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற தந்தையர் தின விழாவில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment