கோலாலம்பூர்-
1எம்டிபி பண பரிமாற்றம் தன்னுடைய சொந்த கணக்கில் நடைபெற்றது பற்றி தனக்கு தெரியாது என முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் கூறுவது முற்றிலும் பொய்யாகும் என பிரதமர் துன் மகாதீர் முகம்மது கூறினார்.
தன்னுடைய சொந்த வங்கி கணக்கில் என்ன நடக்கிறது என பிரதமராகவும் நிதியமைச்சராகவும் பதவி வகித்தவர் கூறுவது அவரின் நிர்வாக சீர்கேட்டையே புலப்படுத்துகிறது.
1எம்டிபி விவகாரம் தொடர்பில் அவர் பொய்யையே கூறி வருகிறார். முன்பு சவூதி அரசரால் இந்த பணம் கொடுக்கப்பட்டது என கூறினார், இப்போது தனக்கு எதுவும் தெரியாது என முன்னுக்கு பின் முரணாக கூறுகிறார்.
எல்லா ஆவணங்களிலும் அவரின் கையெழுத்து மட்டுமே உள்ள நிலையில் தனக்கு எதுவுமே தெரியாது என கூறும் நஜிப்பின் பொய் கூற்றுகள் அவரின் ஊழல் தொடர்பை வெளிபடுத்துகிறது என துன் மகாதீர் மேலும் சொன்னார்.
No comments:
Post a Comment