Thursday, 7 June 2018

ஜூலை 16இல் நாடாளுமன்ற முதலாவது கூட்டம்- பிரதமர்

கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் முதலாவது நாடாளுமன்றக் கூட்டம் வரும் ஜூலை 16ஆம் தேதி நடைபெறும் என பிரதமர் துன் மகாதீர் முகம்மது அறிவித்துள்ளார்.

இந்த நாடாளுமன்றக்  கூட்டம் 20 நாட்களுக்கு நடைபெறும் என தெரிவித்த அவர், வாக்குறுதி அளித்தப்படி சில சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்படும் என்றார்.

இதில் பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி), பொய் செய்தி தடுப்பு சட்ட மசோதா  அகற்றுவது போன்ற பல்வேறு சட்ட மசோதா வாக்குறுதி அளித்தப்படி அகற்றப்படும்.

ஜூலை 16இல் நடைபெறும் முதலாவது கூட்டத்தை மாமன்னர் சுல்தான் முகமட் வி உரையுடன் தொடங்கப்படும் என துன் மகாதீர் கூறினார்.

No comments:

Post a Comment